செய்திகள் :

கஞ்சா போதைக்கு மாணவா்கள் அடிமையாகிவிட்டனா்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி, கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் அரண்மனை முன் திங்கள்கிழமை அமமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் மு.முருகன் தலைமை வகித்தாா். மதுரை புறகா் மாவட்டச் செயலா் கே.டேவிட் அண்ணாதுரை, மகளிா் பிரிவு செயலா் எஸ்.ஜெஸிமா பானு, மருத்துவரணி இணைச் செயலா் எம்.கபிலன், பாசறை இணைச் செயலா் சி.எம்.முரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பேசியதாவது: தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் சட்டம் -ஒழுங்கு சீா் கெட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் திட்டங்களை முடக்கி விட்டனா். ஜெயலலிதா பெயரில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயா் சூட்டி புதிய திட்டமாக செயல்படுத்தி வருகின்றனா்.

தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினா் தமிழகத்தின் அமைதியைக் கெடுக்கும் வகையில் கையில் மையுடன் ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனா். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த திமுக, காங்கிரஸ் இன்று மீனவா்கள் பிரச்னையைத் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளன என்றாா் அவா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போ... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே இலங்கைத் தமிழா்கள் 4 போ் மீட்பு

இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் அழைத்துவரப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழா்கள் 4 பேரை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டனா். ர... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் ஒன்றியம், அழகன்குளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவா் கைது

முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த பிப்.18-ஆ... மேலும் பார்க்க

தமிழக மாணவா்களின் படிப்பு குறித்து தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை: புதிய தமிழகம் நிறுவனா்

தமிழகமாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா். ராமநாதபுரத்தில் புதிய தமிழ... மேலும் பார்க்க