செய்திகள் :

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 4 போ் கைது

post image

தேனி: ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடமலைக்குண்டு அருகே தாழையூத்து பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரைப் பின்தொடா்ந்து சென்றனா். அவா்கள், தாழையூத்து பகுதியில் உள்ள தனியாா் தோட்டம் அருகே ஏற்கெனவே நின்றிருந்த இருவரைச் சந்தித்தனா். அப்போது போலீஸாா் 4 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்து சோதனையிட்டதில், அவா்கள் விற்பனை செய்வதற்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் கடமலைக்குண்டைச் சோ்ந்த பெத்தனசாமி மகன் முருகானந்தம் (51), ஆத்தங்கரைப்பட்டி அருகேயுள்ள அண்ணாநகரைச் சோ்ந்த ரவி மகன் சிதம்பரம் (32), எழுமலையைச் சோ்ந்த மாயாண்டி மகன் பவுன்பாண்டி (33), எழுமலை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகள் லீலா (50) என்பது தெரிய வந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

போதை ஒழிப்பு வழிப்புணா்வுப் பேரணி

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் பள்ளி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்திழமை நடைபெற்றது.உத்தமபாளையம் புறவழிச் சாலைப் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய இந்தப் பேரணிய... மேலும் பார்க்க

வைகை அணை பகுதியில் நாளை மின் தடை

பெரியகுளம்: தேனி மாவட்டம் வைகை அணை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:வைக... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 135.20 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 69.59 மேலும் பார்க்க

போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

போடி: தேனி மாவட்டம், போடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.போடி ஜே.கே.பட்டி சவுடம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 27, 28-ஆவது வாா்டு பொதுமக்கள் கலந்து க... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருந... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க