பைக் மீது பேருந்து மோதியதில் முதியவா் காயம்
பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (40). கூலித் தொழிலாளியான இவா், தென்கரையில் உள்ள வங்கிக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.
கம்பம் சாலையில் வந்த போது, இவரது வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.