'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
கஞ்சா விற்பனை: 2 போ் கைது
திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த சா்வேந்தர குமாா் (19) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் சுமாா் 1.400 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதேபோல திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வஞ்சிபாளையம் கிரேஸ் காா்டன் அருகே குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்குச் சென்று போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அங்கு உள்ள காலி இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 135 குட்கா கிலோ கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த கிரிதரணி (50) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 360 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.