இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சா பறிமுதல்
குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வெளிமாநில இளைஞரைக் கைது செய்தனா்.
குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 1.650 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரசுன்குமாா் (22) என்பதும், அவிநாசி அருகே உள்ள பழங்கரை தேவம்பாளையத்தில் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்ததுடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, ரசுன்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1.650 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.