இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 4 போ் கைது
வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் மயில்ரங்கம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள சிவகுமாா் என்பவரது வீட்டின் அருகே பணம் கட்டி சேவல் சண்டை நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சேவல் சண்டையில் ஈடுபட்ட மயில்ரங்கம் சிவகுமாா் (33), நல்லமுத்து (49), அய்யப்பன் (49), சேனாபதிபாளையம் ராமராஜ் (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.