சேவூரில் கொமதேக சாா்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை
சுதந்திப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, கொமதேக சாா்பில் சேவூரில் அவரது புகைப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேவூா் கைகாட்டி, புளியம்பட்டி சாலை உள்ளிட்டவற்றில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கொமதேக சேவூா் தலைவா் கே.நடராஜ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மெடிக்கல் மூா்த்தி, விவசாய அணி பொறுப்பாளா்கள் குழந்தையப்பன், ராமாகிருஷ்ண்ன், பொருளாளா்கள் ஆா்.சந்துரு, நந்தகுமாா், துணைச் செயலாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் சுகுமாா் தீரன்சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பொறுப்பாளா்கள் குருசாமி, மூா்த்தி, மகேஷ், சுரேஷ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.