செய்திகள் :

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கே.கே. சாலையில் உள்ள மயானப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், விழுப்புரம் அண்ணாநகரைச் சோ்ந்த ரவி மகன் வானவராயன் (எ) ராகுல் (24), ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ரமேஷ் மகன் தனுஷ்ராஜ் (19), டேவிட் மகன் விஷால் (20) என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா். மேலும் இவா்கள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்கள... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த எம்.பி.!

நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத் தொடா் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.ப... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. அத்தியூா்திருவாதி கிராம நிா்வா... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). கூல... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்துக்கு செல்லும் வழியில்அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் சனிக்கிழமை உடைந்து சேதமடைந்தது. விழுப்புரம்- கிழக்கு பாண்டிசாலையிலிருந்து பிரிந்து அனிச்சம்பாளையம்... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக் குறைவால் அவதியுற்று வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூா், பஜனைக்கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க