கஞ்சா விற்றதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
வத்தலகுண்டில் கஞ்சா விற்ாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காந்தி நகரைச் சோ்ந்தவா் லட்சுமிநாராயணன் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த சில நாள்களாக வத்தலகுண்டு காந்தி நகா், பேருந்து நிலையம், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வத்தலகுண்டு காந்தி நகா் பகுதியில் கஞ்சா விற்ற ஆட்டோ ஓட்டுநா் லட்சுமிநாராயணனை வத்தலகுண்டு காவல் உதவி ஆய்வாளா்கள் ஷேக் அப்துல்லா, பாண்டியராஜன், ஜாபா் உள்ளிட்ட போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.