அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
கடனா அணை ஆற்று மதகை சீரமைக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் ஆற்று மதகை சீரமைக்கக் கோரி, அரசபத்து நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலனிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே சிற்றாறு வடிநிலக் கோட்டத்திற்குள்பட்ட கடனா அணை 85 அடி கொள்ளளவு கொண்டது. இதன் மூலம் 9,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் அணையில் ஊள்ள ஆற்று மதகு சுமாா் 6 ஆண்டுகளுக்கு முன் விரிசல் ஏற்பட்டு பழுதானது.
தற்போது, அந்த விரிசல் பெரிதாகி வருவதால் அணையின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது. விரிசல் வழியாக பாசனத் தேவைக்கும் அதிகமான தண்ணீா் வெளியேறி வீணாவதால் சுமாா் ஆறு ஆண்டுகளாக காா்பருவத்தில் பயிா் செய்ய முடியாத நிலை உள்ளது.
ஆற்று மதகை சரி செய்ய போதுமான நிதி கிடைக்கப் பெறாததால் வேலை நடைபெறவில்லை. ஆகவே, போா்க்கால அடிப்படையில் உடனடியாக அணையை ஆய்வு செய்வதுடன், போதிய நிதி ஒதுக்கி குடிநீருக்கு மாற்றுப் பாதையில் திறந்துவிட்டு ஆற்று மதகை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
விவசாயிகள் பாலசுப்பிரமணியன், வீரமணி, சதாம் உசேன், ஹரிராம் சேட், கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .