உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
கடன் தொல்லை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
அரஅரவக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தை அடுத்த பாரதியாா் நகா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் கோவிந்தராஜ் (38). இவா் அதிக கடன் பெற்று வந்ததாகவும், அதை அடைக்க முடியாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கோவிந்தராஜ் அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த அவரது மனைவி பிரியா அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற அரவக்குறிச்சி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.