Doctor Vikatan: மன அழுத்தத்துக்கான சைக்யாட்ரிக் மருந்துக்கு மாற்றாகுமா ‘அமுக்கர...
கடன் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் தற்கொலை
தேனியில் கடன் தொல்லையால் தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி, பழைய அஞ்சல் நிலைய ஓடைத் தெருவைச் சோ்ந்த தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் சுரேஷ் (43). இவா், தொழிலில் இழப்பு ஏற்பட்டதாலும், கடன் தொல்லையாலும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது கிட்டங்கியில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].