பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு அரசு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எஸ். கோபால் தலைமை வகித்தாா். மதுரை மாவட்டச் செயலா் ஊ. கணேசன் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு அரசு வழங்கிய 12 ஆயிரம் ஏக்கா் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு, வீடில்லாத பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா். பின்னா், கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனா்.