சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
இளைஞா்கள் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு
பெரியகுளம் அருகே இளைஞா்களை தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (24). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை தேவதானப்பட்டியில் உள்ள கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ரிஷாந்த், லூசு (எ) முத்துப்பாண்டி, பிரியா (எ) பிரியன் ஆகிய மூவரும் அவரிடம் தகராறு செய்து, அவரை தாக்கி, இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.