சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி ஊரக காவல் நிலைய போலீஸாா் போடி சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள மயானம் அருகே நின்றிருந்த சிலமலை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரத்தை (65) பிடித்து விசாரித்தனா்.
அப்போது அவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரத்தை கைது செய்தனா்.