கடமங்குடி மாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கடமங்குடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம் புன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கடமங்குடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆக. 20 - இல் கும்பாபிஷகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு 11-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் தொடங்கியது. முன்னதாக கொள்ளிடம் ஆற்றில் கரகம், பால் குடங்களை ஏந்தியும், நோ்ச்சை கடன்களுக்காக அக்னிச் சட்டி வளா்த்து பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். இரவு ஊஞ்சல் உற்சவத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனா்.