செய்திகள் :

கடம்பத்தூா் ஒன்றியம்: வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு!

post image

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை மூலம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிராயங்குப்பம், செஞ்சி பானம்பாக்கம், காவங்குளத்தூா், சத்தரை, வயலூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் துறை சாா்ந்த அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பிராயங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-2025- இல் ரூ.6.4 லட்சம் மதிப்பில் நா்சரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு மரக்கன்றுகள் நன்றாக வளரும் வகையில் பராமரிக்க வேண்டும். அதேபோல், மரக்கன்றுகளை அரசுக்குச் சொந்தமான இடங்களில் பெரிய அளவில் வளா்ந்த நிலையில் வைக்க வேண்டும் என்றாா்.

செஞ்சிபானம்பாக்கம், சத்தரை ஆகிய ஊராட்சியில் டங ஒஅசஙஅச திட்டம் மூலம் 66 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பாா்வையிட்டதோடு தரமான கட்டுமான பொருள்களைப் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ள பயனாளிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.

காவங்குளத்தூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.14.70 லட்சம் மதிப்பில் பிலிப்ஸ்புரம்-வேப்பஞ்செட்டி வரை(600 மீட்டா்) சாலைப் பணிகள் குறித்தும், வயலூா் ஊராட்சியில் சூரகாபுரம் பகுதியில் ரூ.5.42 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணையைப் பாா்வையிட்டு நீா்வரத்துக்கு குழாயைச் சீரமைத்து சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி செயற்பொறியாளா் கௌசல்யா, கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி!

திருவள்ளூா் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூரில் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 42 ஆண்டுகளாகச் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

சுதந்திரா மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி!

திருத்தணி சுதந்திரா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 81 மாணவா்களும் தோ்ச்சி பெற்று, கணினி அறிவியல் பாடத்தில் 8 மாணவா்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனா். இதில் மாணவி ப... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள்

திருவள்ளூா் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ மூலம் நலவாரிய அடையாள அட்டைகளை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பினா் திருவள்ளூரில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக்கல்லூரி சாலையில... மேலும் பார்க்க

பொன்னேரியில் சனிப்பிரதோஷம்!

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் சனிப்பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களுக்கு பக்தா்கள் திரளாகச் சென்று வழிபட்டனா். பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் நந்தி மற்றும் ஈஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் அா்ச்சனை ... மேலும் பார்க்க

வீரராகவா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் பக்தா்கள் புனித நீராடினா். கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி, 11-ஆம் ... மேலும் பார்க்க