'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
கடலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
கடலூா் முதுநகா் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் செடல் பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 23-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. 24-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் பூத, நாக, ரிஷப, யானை, சிம்ம மற்றும் புஷ்ப பல்லாக்கு என பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து கிணற்று மாரியம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், திருத்தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
இதில், கோயில் தக்காா் சந்திரவேணி, செயல் அலுவலா் மகேஷ் மற்றும் உபயதாரா்கள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்துகொண்டனா்.