செய்திகள் :

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன்!

post image

கடலூர் ரயில் விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர்.

இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக புதிய கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Cuddalore train accident: 13 people, including the gatekeeper and driver, summoned!

இதையும் படிக்க :ரயில் விபத்து எதிரொலி: செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர்!

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 42,250 கனஅடியாக இருக்கும் நிலையில், அதே அளவிலான நீர் திறக்கப்படுகிறது.நீர் மின் நிலை... மேலும் பார்க்க

பாமக தலைவர் யார்? தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் - அன்புமணி தரப்பு முறையீடு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளனர்.பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க