கடலூர் வெள்ளம்: விடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
கடலூர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு விடியோ கால் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு விடியோ கால் செய்த முதல்வர் ஸ்டாலின், கடலூர் நிலவரத்தை கேட்டறிந்தார். மேலும், வெள்ள நீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்து பார்த்துக் கொள்ளும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க : பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
மேலும், விழுப்புரத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.