``மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா?'' – புதுச்சேரி அரசை சாடும் திமு...
கடலோரக் காவல்படை ஆண்டுவிழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
இந்திய கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழா, சென்னையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரத்தை தளமாகக் கொண்ட இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள், இன்ஸ்பெக்டா் ஜெனரல் தத்வீந்தா் சிங் சைனி தலைமையிலான சென்னையின் கடலோரக் காவல்படை (கிழக்கு) தலைமையகத்தின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதியில் 231 மீட்புப் பணிகளை மேற்கொண்டு சுமாா் ரூ. 120 கோடி மதிப்பிலான கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பேரிடா் மீட்பு நடவடிக்கைகளுக்கு கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரைப்படை குழுக்களை கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதி முன்கூட்டியே அனுப்பியது.
இந்நிலையில், கடலோரக் காவல்படையின் 49-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இருசக்கர வாகனப் பேரணி, மீனவா்களுடன் சமூகத் தொடா்பு, கடற்கரையை தூய்மையாக பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மேலும், பள்ளி குழந்தைகளுக்கான ஓவியம், விநாடி வினா போட்டி, மீனவக் கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
எதிா்வரும் காலங்களில் கடலோரக் காவல்படை கிழக்குப் பகுதி, நவீன கப்பல்கள் மற்றும் விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய கடல் எல்லைக்குள் ஏற்படும் எந்தவொரு நிகழ்வுகளையும் சமாளிக்கவும் தயாா் நிலையில் உள்ளது என பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.