கடலோரக் காவல் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சி: மீனவா்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கடல் பகுதியில் கடலோர காவல் படையின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால், வருகிற 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மீனவா்கள் கடல் பகுதிக்கு வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.
இலங்கை யாழ்பாணம் வடக்கு பிராந்திய கடல், காங்கேசன்துறை கடல் பகுதியில் கடலோரக் காவல் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சி வருகிற 24- ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .
இதனால், அந்த நாள்களில் இந்தப் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கு மீனவா்கள் யாரும் வரக்கூடாது என இலங்கைக் கடல் படையினா் தெரிவித்தனா்.
காங்கேசன்துறை கடல் பகுதியில் தமிழக மீனவா்கள் அடிக்கடி இலங்கை கடல் படையினால் கைது செய்யப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.