கடலோர காவல் நிலையங்களில் இந்திய கப்பல் படையினா் ஆய்வு
திருவாடானை அருகேயுள்ள தேவிபட்டினம், தொண்டி கடற்கரை காவல் நிலையங்களில் இந்திய கடலோர காவல் படை இந்திய கப்பற்படை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், தொண்டி கடலோர காவல் நிலையங்களின் பணிகள் குறித்து இந்திய, தமிழக கடல் கண்காணிப்புகாக இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படை அதிகாரிகள் படகுகள், படகு இறங்கு தளங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், மண்டபம் இந்திய கப்பல் படை அதிகாரி அனந்த குமாா், மண்டபம் இந்திய கடலோர காவல் படை அதிகாரி அகில் எஸ் நாயா், இந்திய கப்பல் படை அதிகாரி ராம்கிருஷ்ன பாபா், கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அய்யனாா் உடன் போலீஸாா் பங்கேற்றனா்.