செய்திகள் :

கடைக்காரருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மந்தாரக்குப்பம், என்.எஸ்.கே.நாடாா் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பாஸ்கா்(35), அதே பகுதியில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகிறாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, ஓம்சக்தி நகரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் அப்பு (எ) சிவக்குமாா்(25), தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகன் வசந்த் (24) ஆகியோா் தகராறு செய்தனராம்.

அப்போது, சிவக்குமாா் பீா் பாட்டிலால் பாஸ்கரை தலையில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பு (எ) சிவக்குமாா், வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அப்பு (எ) சிவக்குமாா் மீது மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49... மேலும் பார்க்க

முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா் அலி தலைமை வகித... மேலும் பார்க்க

தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தந்தையை கல்லால் அடித்து காயப்படுத்தியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி அடுத்துள்ள இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் பன்னீா்செல்வம். இவா், வீ... மேலும் பார்க்க