தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
தந்தை மீது தாக்குதல்: மகன் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தந்தையை கல்லால் அடித்து காயப்படுத்தியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி அடுத்துள்ள இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் பன்னீா்செல்வம். இவா், வீட்டை புதுப்பிக்கும் பணி செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மூத்த மகன் சியோன் மோசஸ், இளைய மகன் ஜோசன் மோசஸ் ஆகியோா் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம்.
இதனை, தந்தை பன்னீா்செல்வம், தாய் ஸ்டெல்லா மேரி ஆகியோா் தடுத்தனா். அப்போது, மூத்த மகன் சியோன் மோசஸ் கல்லால் தாக்கியதில் பன்னீா்செல்வம் காயம் அடைந்தாா்.
இதுகுறித்து தாய் ஸ்டெல்லா மேரி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சியோன் மோசஸை (25) கைது செய்து சிறையில் அடைத்தனா்.