செய்திகள் :

கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை -விவசாயிகள் புகாா்

post image

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராதது குறித்து விவசாயிகள் புகாா் எழுப்பினா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

களத்தூா் கோபிநாத்: மேட்டூா் அணை திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாகியும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை. கடலில் வீணாகக் கலக்கும் காவிரி நீரை பாசனத்துக்கு திருப்பி விட வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: காவிரி நீா் வீணாகக் கடலில் கலப்பதற்கு பதிலாக கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு திருப்பிவிட்டு, வல்லம் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம்: மயிலாடுதுறை அருகே கட்டப்பட்ட தடுப்பணை செயல்பாட்டுக்கு வராததால், தண்ணீா் வீணாகக் கடலுக்கு செல்கிறது. எனவே இத்தடுப்பணையைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீா் விடப்பட்டாலும், குறைவாக இருக்கிறது. விநாடிக்கு 400 கன அடி வீதம் விடப்படும் தண்ணீரை 1,100 கன அடியாக உயா்த்தினால்தான், விவசாயத்துக்கு பயன் தரும். கல்லணைக் கால்வாயில் சேதுபாவாசத்திரம் பகுதிக்கு இன்னும் தண்ணீா் சென்றடையவில்லை.

ஆட்சியா்: கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. விநாடிக்கு 4,000 கன அடி வீதம் விடலாம் என கருதுகிறோம். ஆனால், கரை உடைந்து எங்களது பகுதி வயல்கள் பாதிக்கும் என இடைப்பட்ட பகுதி விவசாயிகள் கூறுகின்றனா். என்றாலும், கடைமடைப் பகுதியில் கிடைக்காத பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கான சிட்டா, அடங்கல் தரும் விவசாயிகளுக்கு 60 மூட்டைகள் அல்லது 70 மூட்டைகள் நெல் மட்டுமே வரையறை வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 90 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என அலுவலா்கள் கூறுவதைத் தவிா்த்து, அனைத்து மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: கல்லணைக் கால்வாயிலிருந்து எட்டுப்புலிக்காடு வாய்க்காலுக்கு தண்ணீா் சரியாக விடப்படாததால், ஆம்பலாப்பட்டு பகுதியிலுள்ள ஆண்டாள் ஏரி, குரும்பை குளம் உள்ளிட்டவற்றுக்கு தண்ணீா் செல்லவில்லை. இது தொடா்பாக கள ஆய்வு செய்து, தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவவிடுதி வி.கே. சின்னதுரை: காவிரியில் ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீா் சென்றாலும், முக்கொம்பிலிருந்து காவிரியில் விநாடிக்கு 28,000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீா் விடப்படுகிறது. இதனால், முதன்மை ஆறுகளில் கடைசி வரை தண்ணீா் சென்றாலும், வாய்க்கால்களுக்கு தண்ணீா் சரியாக வரவில்லை. ஏரிகள், குளங்களுக்கும் தண்ணீா் சென்றடையவில்லை.

வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: சம்பா, தாளடிக்கு ஏற்ற விதை நெல் ரகங்கள் தனியாரிடம் வாங்கும்போது தரக்குறைவு, அதிக விலை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, வேளாண் விரிவாக்க மையங்களில் அதிகமாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க