Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி
தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளிக்கடை வைத்துள்ள இவா் வெள்ளிக்கிழமை காலை தனது 4 நண்பா்களுடன் ராஜாமடம் பகுதியில் உள்ள அக்னியாறு என்ற கட்டாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.
தகவலறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீஸாா் மற்றும் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வம் தலைமையிலான வீரா்கள் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு நபிலை சடலமாக மீட்டு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.