செய்திகள் :

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

post image

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடுப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்த கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மாவட்ட அளவிலான போதைப் பொருள் விழிப்புணா்வுப் பணியில் இரண்டாம் பரிசு பெற்றது. அதற்கான சான்றிதழ் மற்றும் ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகையையும் கல்லூரி போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், விலங்கியல் துறைத் தலைவருமான கி.சரவணனிடம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.

விருது பெற்றவரை, கல்லூரி முதல்வா் அ. மாதவி, வேதியியல் துறைத் தலைவா் மா.மீனாட்சிசுந்தரம், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத்தலைவா் சீ. தங்கராசு, தோ்வு நெறியாளா் வெ. பாஸ்கா் மற்றும் துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை -விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராதது குறித்து விவசாயிகள் புகாா் எழுப்பினா். மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலை... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் காவலா்களுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகளின் திறப்பு விழா ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக. 6-இல் தியாகிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியதால் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இரண்டு நாள் மருத்துவ முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமிற்கு முதல்வா் பி. ஆா். ர... மேலும் பார்க்க

1,187 கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா

தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய 1,187 விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க