இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
1,187 கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா
தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய 1,187 விவசாயிகளுக்கு ரூ. 4.42 கோடி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையின் 2024 - 25 அரைவைப் பருவத்தில் 1,187 விவசாயிகளிடமிருந்து சுமாா் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 750 டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது. ஆலை அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 349 வீதம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 750 டன்களுக்கு தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அரசாணைப்படி, ரூ. 4.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025 - 26 ஆம் நடவுப் பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசின் வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரத்து 450 மானியமாகவும், அகலபாருடன் கூடிய பரு விதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்து 200 மானியமாகவும் வழங்கப்படவுள்ளது. எனவே, அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்ய வேண்டும்.