Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது
தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்ந்த தொழிற் சங்கமான சிஐடியு அமைப்பில் தஞ்சாவூா் மாவட்டத் துணைச் செயலா்.
இந்நிலையில் அப்பகுதி தனியாா் தின்பண்டத் தயாரிப்புக் கூடத்திலிருந்து வெளியேறும் புகை, தூசி குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுவது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் சென்றன.
இதுதொடா்பாக அன்பு வீட்டில் வியாழக்கிழமை மாலை தனியாா் தின்பண்ட தயாரிப்பு கூடத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறி சிலா் அத்துமீறி புகுந்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அன்பு அளித்த புகாரின்பேரில் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் மகன் வெங்கடேஷ் (30), அருண் (28) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.
சிஐடியு கோரிக்கை: இது தொடா்பாக சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிப்பு தயாரிப்புக் கூடத்திலிருந்து வெளிவரும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத்தான் அப்பகுதி மக்கள் புகாா் செய்துள்ளனா்.
இதற்காக அன்பு வீட்டில் கொலை மிரட்டல் விடுத்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல நிகழாமல் தடுக்க காவல் துறை செயல்பட வேண்டும்.