'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் திறப்பு
திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் காவலா்களுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகளின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக குடியிருப்புகளைத் திறந்துவைத்தாா். உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன், கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகர மேயா் சரவணன், துணை மேயா் சுப.தமிழழகன், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா விஜயன், காவல்துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.