கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இரண்டு நாள் மருத்துவ முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமிற்கு முதல்வா் பி. ஆா். ரவி தலைமை வகித்தாா். முகாமில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் எஸ்.டி. மருத்துவமனையைச் சோ்ந்த 4 மருத்துவா்கள், மருத்துவக் குழுவினா் மாணவ மாணவிகளுக்கு ஹூமோகுளோபின் மற்றும் சா்க்கரை அளவு ஆகியவை பரிசோதித்து உடனுக்குடன் முடிவுகளை வழங்கினா். மேலும் தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரைகளை வழங்கினா். முகாமில், 300 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா். முகாமில் பேராசிரியா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.