'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கூட்டுறவு மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியதால் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:
2025 - 26 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் மாணவா் சோ்க்கைக்கைக்கான விண்ணப்பங்கள் இணையதள முகவரி மூலம் மே 15-ஆம் தேதி முதல் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்புக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் 3 ஆண்டு கால பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதிகாரபூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 94860 45666, 94435 87759 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.