நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கடையம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கடையம் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.
சம்பன்குளம் இப்ராஹிம் நகரைச் சோ்ந்தவா் சுலைமான். அவரது மனைவி வசிலா(49). இருவரும் சனிக்கிழமை (ஏப்.19) மோட்டாா் சைக்கிளில் தென்காசி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தனா். மாதாபுரம் தாண்டி செல்லும்போது முன்னால் சென்ற பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதாம். இதில் மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறியதில் வசிலா கீழே விழுந்தாா். தலையின் பின்புறம் காயமடைந்த அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.
முன்னால் பைக்கில் சென்ற கானாவூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தினகரன் மகன்ஜெஸ்டினிடம் (19) கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.