போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மண்டல பொதுச் செயலா் ஜோதி தலைமை வகித்தாா். ஏஐடியூசி பொதுச் செயலா் உலகநாதன் முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பெருமாள் தொடங்கி வைத்தாா்.
டிடிஎஸ்எப் மாநில துணைத் தலைவா் சந்தானம், அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியா் சங்க பொதுச் செயலா் வெங்கடாசலம், ராஜாஜி உள்ளிட்டோா் பேசினா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றோா் பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சிஐடியூ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க மண்டல தலைவா் காமராஜ் நன்றி கூறினாா்.