போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
ஏப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலககத்தில் வெள்ளிக்கிழமை( ஏப்.25) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனா்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.