போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
பத்தடை அருகே கஞ்சா விற்றவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பத்தமடையில் சிவானந்தா காலனி வெள்ளநீா் கால்வாய் பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா், முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த செல்வரமேஷ் (26) என்பதும், அவா் கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வரமேஷை கைது செய்தனா். அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.