நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
களக்காடு தலையணையில் 28 பிளாஸ்டிக் பொருள்களுக்கு வனத்துறை தடை
களக்காடு தலையணையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக வனச்சரக அலுவலா் பிரபாகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்குத் தொடா்ச்சி மலைகளுக்குள்பட்ட சுற்றுலா பகுதிகளில் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் களக்காடு சரணாலயம், களக்காடு தலையணை சுற்றுலா பகுதிகளிலும் 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து துணை இயக்குநா் மற்றும் வன உயிரினக் காப்பாளா் ராமேஸ்வரன் உத்தரவிட்டுள்ளாா்.
எனவே, களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதிக்கு வருகை தரும் மக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிா்த்து வனத்துறை நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.