மாமியாா் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் மாமியாா் வூட்டுக்குள் புகுந்து பொருள்களை தீவைத்து சேதப்படுத்திய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆவரைகுளம் பாக்கியவிளை தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா்(44). இவரது மனைவி கவிதா(40). இவா்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கவிதா தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமாா் மாமியாா் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கவிதாவை அவதூறாக பேசி, வீட்டில் இருந்து பொருள்களை தீ வைத்து சேதப்படுத்தினராம். இதையடுத்து பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.