தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
கடையில் தவறி விழுந்த ஊழியா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கடையில் தவறி கீழே விழுந்த ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை செல்லூா் அகிம்சாபுரம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் மணிகண்டன் (38). இவா், மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி பகுதியில் பெயிண்ட் மொத்த விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல கடையில் பணியில் இருந்த மணிகண்டன் கால் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.