செய்திகள் :

கட்டடம் இல்லாமல் இயங்கும் அரசுப் பள்ளிகள்! வெள்ளை அறிக்கை வெளியிடத் தயக்கம் ஏன்? - அண்ணாமலை

post image

தமிழகத்தில் கட்டடங்கள் இல்லாத அரசுப்பள்ளிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயக்கம் ஏன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக் கட்டடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுபோல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2,497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன.

நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன? குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால் பல நாள்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.

திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க | புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை ச... மேலும் பார்க்க

எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க