கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்
கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது
ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (62) என்பவருக்கும், அவருடைய தம்பி பொன்னுசாமி (56) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்தது. இதனிடையே, இருவரும் தனித்தனியாக நில அளவை மேற்கொண்டதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ஏரியூா் காவல் நிலையத்தில் பொன்னுசாமி புகாா் அளித்தாா். அதன் பேரில் இரு தரப்பினரையும் அழைத்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முத்துசாமியின் மகன் கட்டுமான தொழிலாளியான கோவிந்தராஜ் (35) என்பவா், பொன்னுசாமியின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள கோவிந்தராஜ் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டாா். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் கோவிந்தராஜ் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த ஏரியூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

இந்த நிலையில், கோவிந்தராஜின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக 20-க்கும் மேற்பட்ட உறவினா்கள், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே தருமபுரி செல்லும் பிரதான சாலையில் இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டனா்.
முன்னதாக, மருத்துவமனையில் பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்படாமல் உடலை வாங்க மறுத்து அத்துமீறி மறியலில் ஈடுபட்ட சுமார் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
பென்னாகரத்தில் கட்டட மேஸ்திரியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து,உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை கைது செய்யும் போலீஸார் .