செய்திகள் :

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்று காதலனுடன் மாயமான மனைவி! - என்ன நடந்தது?

post image

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார்.

மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார். கணவரின் சிறுநீரகத்தை 10 லட்சத்துக்கு விற்குமாறு அவருக்கு மனைவி மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகு கணவர் தனது சிறுநீரகத்தை விற்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் உறுப்பு வாங்குவோரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உறுப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்திவிடலாம் என்று அந்த நபர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

தனது உறுப்பு தானத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை எதிர்காலத்தில் தனது மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தலாம் என்று எண்ணிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கணவரை இவ்வாறு வற்புறுத்தி உறுப்பை தானம் செய்ய வைத்ததற்கு பின்னால் மனைவி வேறொரு ஒரு திட்டம் போட்டுள்ளார்.

அவரது மனைவி தனது எதிர்காலத்தை பாரக்பூரை சேர்ந்த மற்றொரு நபருடன் திட்டமிட்டுள்ளார். ஓவியரான அந்த நபர் facebook மூலம் இந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகி, நாளடைவில் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதற்காகவே திட்டமிட்டு கணவரை சிறுநீரகத்தை விற்கச் செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார் அந்த பெண்.

இதுகுறித்து கணவர் போலீஸில் புகார் அளிக்கவே இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மனித உறுப்புகள் விற்பனை செய்வது சட்ட விரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: 'சோலிகே பீச்சே கியாஹை' பாடலுக்கு நடனமாடிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் தந்தை

டெல்லியில் ரகு (26) என்பவருக்குத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகன் மணமேடையில் மணப்பெண்ணின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் மணமகனின் நண்பர்கள் பாடல்... மேலும் பார்க்க

உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

உத்தரப்பிரதேசத்தில் ரூ.100க்கு ஆசைப்பட்டு சவால் விட்டு ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். அங்குள்ள ஜான்சி அருகில் உள்ள பூனாவாலி காலா என்ற கிராமத்தில் வசித்தவர் உத்தம் ரஜபுத். இவர் தனது நண்பர்கள் நான்கு ப... மேலும் பார்க்க

தாயை மாட்டுவண்டியில் வைத்து இழுத்து வந்த மகன்; கிரேக்கப் பெண்ணின் திருமணம்; கும்பமேளா சுவாரஸ்யங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று மட்டும் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும்... மேலும் பார்க்க

Guillian Barre Syndrome: 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; ஒருவர் மரணம்! - என்ன நடக்கிறது புனேவில்?

கிலன் பார் சிண்ட்ரோம் Guillian Barre Syndrome (GBS). கடந்த 3 வாரங்களாக புனே நகரில் வேக வேகமாக பரவிக்கொண்டிருக்கிற நரம்பியல் நோய் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறா... மேலும் பார்க்க

Rakhi Sawant: மூன்றாம் திருமணம்; பாகிஸ்தான் நடிகரை திருமணம் செய்யும் ராக்கி சாவந்த்!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை திருமணமானவர். பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற ராக்கி சாவந்த் இரண்டாவது முறையாக திருமணம் செய்த விவாகரத்து செய்தபோது ... மேலும் பார்க்க