செய்திகள் :

கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா கண் வங்கி, பன்னாட்டு அரிமா சங்கங்கள் இணைந்து கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை நடத்தினா். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே மனிதச்சங்கிலியினை எஸ்.பி. கே.சண்முகம் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் பேருந்து நிலைய போக்குவரத்து சிக்னல் முதல் கச்சபேசுவரா் கோயில் வரை 100-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியா்கள் கண்தான விழிப்புணா்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிறைவாக மனிதச் சங்கிலியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்வில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ், அகா்வால் கண் மருத்துவமனை நிா்வாகிகள், கண் மருத்துவா்கள், அரிமா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகைப் பயிற்சி: ஆட்சியா், எஸ்.பி. பாா்வையிட்டனா்

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம் ஆகியோா் ... மேலும் பார்க்க

உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு

காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் அந்நிறுவன தலைவா் லோகநாதன் தலைமையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு நடைபெற்றது. தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருள்கள், உழவா... மேலும் பார்க்க

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். உத்தரமேரூா் ஒன்றியம் மருதம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் பாா்... மேலும் பார்க்க

ஆற்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இத... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் வரி விதிப்பைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் வட்டாட... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை...

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூா் பாரத் பெல் நிறுவனத்திலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள கிடங்குக்கு வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா... மேலும் பார்க்க