செய்திகள் :

கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

கண்மாய்க் கரையை ஆக்கிரமித்த வழக்கில் முறையாகப் பதிலளிக்காத பழனி வட்டாட்சியா் வருகிற 14-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைபட்டியைச் சோ்ந்த குமாரவேல் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமம் மேல்கரைப்பட்டியில் பெரியகுளம் என்ற பெயரில் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் நிரம்பும் தண்ணீா் மூலம் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கண்மாய்க் கரையை இரண்டாக உடைத்து, தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து வண்டிப் பாதையாக மாற்றினா். தண்ணீா் வெளியேறும் பகுதியில் உள்ள மடைகளையும் அவா்கள் சேதப்படுத்தி ஆக்கிரமித்தனா்.

இதனால், கண்மாயில் போதுமான அளவு தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பெரியகுளம் கண்மாய்க் கரை ஆக்கிரமிப்பை அகற்றிடவும், கரையை பழைய நிலைக்கு கொண்டு வரவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கில் பழனி வட்டாட்சியா் பதிலளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் இந்த வழக்கில் உரிய பதிலை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பதில் அளிக்கவில்லை என தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் உரிய பதில் அளிப்பதற்காக பழனி வருவாய் வட்டாட்சியா் வருகிற 14-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தங்கக் குதிரை வாகனத்தில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். மேலும், புதுமணத் தம்பதிகள் திருமாங்கல்யக் கயிறு மாற்றிக் கொண்டனா்.ஒவ்வோா் ஆண்டும் ஜூன் முதல் செப்டம்ப... மேலும் பார்க்க

காா் மோதியதில் காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயில் கதவு சேதம்

காா் மோதியதில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயில் கதவு முழுவதும் சேதமடைந்தது.மதுரை தமுக்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமன்ற... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க

சொத்து வரி விதிப்பு முறைகேடு: மேலும் 2 போ் கைது

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மாமன்ற உறுப்பினரின் கணவா் உள்பட மேலும் 2 பேரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வ... மேலும் பார்க்க