செய்திகள் :

கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை!

post image

வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் இன்று(ஜன. 22) 10 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை முடிவடைந்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுகவை சேர்ந்த கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அவருக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான விவகாரம் குறித்தும், ரூ.13.7 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜராகக் கோரி நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று காலை 10.30. மணியளவில் கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றடைந்தார். காலையில் தொடங்கிய விசாரணை இரவு முடிவடைந்தது.

சென்னையில் ஜன. 25ஆம் தேதி மக்கள் குறைதீர் முகாம்!

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 25 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை வாா்டு முன்னாள் உறுப்பினரான அதிமுகவை சோ்ந்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சேலம் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம்.அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேர... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

தமிழக ஆளுநர் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் முதல் வழக்காக இது விசாரணைக்கு எடுத்துக்கொள்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

புது தில்லி : தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று(ஜன. 22) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை சந்தித்துப் பேசினார். மணப்பாறையில் ஜன. 28 முதல் பிப். 3-ஆம் தேதி வரை பாரத சாரண ... மேலும் பார்க்க

நாளை முக்கிய அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க