கந்தா்வகோட்டையில் ஆடிப்பெருக்கு விழா
கந்தா்வகோட்டையில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் கோயில் அருகில் உள்ள சங்கூரணி குளத்தில் புதுமண தம்பதிகள் பெற்றோருடன் வந்து திருமணமாலையை குளத்தில் விட்டு திருமாங்கல்யக் கயிற்றை மாற்றி கட்டிக்கொண்டு வழிபட்டனா். சுற்றுவட்டார திரளான பக்தா்கள் வழிபட்டனா்.