காதலின் தோல்வியால் விளைந்த அறத்தின் வெற்றி! - பொற்சுவையின் தியாகம்| #என்னுள்வேள்...
கந்துவட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்குள்பட்ட மருங்கூா் பகுதியைச் சோ்ந்த பெண் அளித்த புகாரின்பேரில், மருங்கூா் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் மனைவி மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள், கந்து வட்டி தொடா்பான புகாா்களை எஸ்.பி.-யிடம் நேரிலோ அல்லது 81222-23319 என்ற கைப்பேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். கந்து வட்டி கேட்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.