கனடா: இந்தியர் கத்தியால் குத்திக் கொலை
கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா தலைநகரான ஒட்டாவா நகரில் உள்ள ராக்லேன்ட் பகுதியில் இந்தியர் ஒருவர், வெள்ளிக்கிழமையில் கத்தியால் குத்தி, கொலை செய்யப்பட்டு உயிரிழந்து சடலமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
மேலும், கொலை செய்ததாகக் கூறி, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. காவலில் வைக்கப்பட்டுள்ளவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறினர்.
இதையும் படிக்க:அம்பத்தூர்: தனியார் ஷோரூமில் தீ விபத்து!