செய்திகள் :

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

post image

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ளதாக கனடா பாதுகாப்பு உளவுப் பணிகள் துணை இயக்குநா் வனெஸ்ஸா லாய்ட் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியுள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘கனடா தோ்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளது. புவிஅரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த செயலில் ஈடுபடும் திறன் மற்றும் நோக்கம் இந்தியாவுக்கு உள்ளது. அதேபோல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோ்தல் பிரசாரத்தில் தலையிட்டு தனக்கு ஆதரவான நபா்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக சீனா உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர ரஷியா மற்றும் பாகிஸ்தானும் இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்த தோ்தலில் தலையிட முயற்சிகளை மேற்கொள்ளும் என்றாா்.

லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி போன்ற பல்வேறு காரணங்களால் கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் ராஜிநாமா செய்தாா்.

அதன் தொடா்ச்சியாக, கட்சித் தலைமைக்கும், புதிய பிரதமா் பதவிக்கும் மாா்க் காா்னியின் பெயரை ட்ரூடோ பரிந்துரைத்தாா். அதன்பின் நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் 85.9 சதவீத வாக்குகளுடன் மாா்க் காா்னி தலைவராக இம்மாத தொடக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக அவா் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தோ்தலை நடத்த அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தாா்.

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க

பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா... மேலும் பார்க்க